Monday, June 24, 2013

மரம் வளர்ப்பு சம்பந்தமாக எங்கே உதவிகள் கிடைக்கும்?

விவசாய இதழ்கள்
இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றி தகவல்கள் கிடைக்கலாம்

  1. பசுமை விகடன்
  2. பூவுலகின் நண்பர்கள்
தன்னார்வ இயக்கங்கள் 
  1. பசுமைக்கரங்கள் - கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஈசா யோக மையத்தின் உதவியோடு இயங்கும் அமைப்பு
  2. நிழல்கள் - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
  3. Chennai Social Service - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
விவசாய, வனக் கல்லூரிகள் இங்கே உங்களுக்கு வணிக முறை மற்றும் தன்னார்வ மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் 
  1. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். இணையதளம்:http://www.tnau.ac.in
  2. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம். Forest College and Research Institute, Mettupalayam. இணையதளம்: http://www.fcrinaip.org
  3. தமிழகத்தில் உள்ள விவசாய, வனக் கல்லூரிகளின் தொகுப்பு:http://www.tnau.ac.in/acad/colleges.html
அரசு நிறுவனங்கள் இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் 
  1. கோயம்புத்தூரில் உள்ளது Institute of Forest Genetics and Tree Breeding என்ற அரசு நிறுவனம். இவர்கள் மர விதைகள், மரம் வளர்ப்பு முறைகளை சொல்லி தருகிறார்கள். இணையதளம்: http://ifgtb.icfre.gov.in

குமிழ் மரம்

எஸ்.டி.சண்முகசுந்தரம்(ஜெகதீஸ்வரர் உயர்ரக நாற்றுப்பண்ணை - கொத்தமங்கலம் ) குமிழ் சாகுபடி குறித்து:

நான் 1987ம் ஆண்டில் புதுக்கோட்டையில் என்.எம்.ஆர் ஆக வேலைக்க சேர்ந்தேன். எனக்கு அங்க கருவேல மரங்களை நடவு செய்யும் வேலையை கொடுத்தார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்ததால் என்னை மேற்பார்வையாளராக நியமனம் செய்தார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போதே சமூக காடுகள் திட்ட அலுவலர் சுப்ரமணியன் என்பவரின் உதவியோடுவணிகவியர் பட்டப்படிப்பையும் தொடர்ந்தேன். கருவேல மரங்களை தொடர்ந்து மா, பலா, புளி போன்ற பழ கன்றுகளையும் நடவு செய்தோம்.

இந்த மரங்களில்லாமல் வேறு மரங்களை அதாவது விவசாயிக்கு நல்ல பலன் கொடுக்கும் மரங்களை நட சொல்ல வேண்டுமென்று முதலில் ரோஸ்வுட் மரங்களை நடவு செய்தோம். ரோஸ்வுட் மரங்கள் பலன் தர 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும் என்பதால் விவசாயிக்கு குறுகிய காலத்தில் பலன் கொடுக்கும் மரங்களைத் தேடிய போது குமிழ் மரத்தை தேர்ந்தெடுத்தேன்.

அதன்படி 1991ம் ஆண்டில் திண்டுகல்லில் உள்ள ஒரு நர்சரியிலிருந்து குமிழ் கன்றுகளை வாங்கி வந்து விவசாயிகளுக்கு நடவு செய்ய கொடுத்தேன். இந்த குமிழ் கன்றானது சிறியதாக இருக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் பல விவசாயிகள் என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.

வயலில் உள்ள குமிழ் கன்றுகளை எல்லாம் பிடுங்கி வீசினார்கள். ஒரு சிலர் மட்டும் அவற்றை ஏதோ நம்பிக்கையில் பராமரித்து வந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று அவர்களை இந்த குமிழ் மரங்கள் லட்சாதிபதிகளாக்கி கொண்டிருக்கின்றன.



குமிழ் மரத்தின் எதிர்காலம்?


விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).



“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, அணவயல் கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.



குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசாயிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

                                                                                                            நன்றி "தழில்சிகரம்.கம்" 

குமிழ் சாகுபடியில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா...! 

மூணு வருஷம்தான் பராமரிப்பு! 

''என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன். 

இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இப்படி நட்டா ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சிக்கலாம். குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சிட்டா... குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சிடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்ச ரூபா வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா... உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.'' 

என்ன... அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்! 

தொடர்புக்கு ரவிச்சந்திரன், அலைபேசி: 96551-82891.

Tharu - Maram