Monday, July 20, 2009

திண்டிவனத்தில் பிச்சை எடுக்கும் மாணவர்கள்


நண்பர்களே..

சென்ற சனிக்கிழமை(18th July) காலை எனது கிராமத்திற்கு செல்வதற்காக திண்டிவனம் பழைய பேருந்து நிலையம் வந்தேன். பிச்சை எடுக்க பழக்கப்படாத ஒரு சிறுவன் அரை மனதுடன் அருகில் வந்து பிச்சை கேட்டான்(எழுதவே கை வரலை) அதட்டலாக எங்க இருந்து வர என்று இன்ன பிற தகவல் கேட்டேன். தயக்கமாக தான் திண்டிவனம் அருகில் உள்ள 'கல்பாக்க'த்தில் இருந்து வருவதாகவும், பேருந்தில் வந்ததாகவும், தன்னுடன் இன்னும் 5 மாணவர்கள் வந்துள்ளதையும் சொன்னான். அவர்களையும் வர கூப்பிடேன்.. 3 பேர் டிபிகல் பள்ளி யூனிபார்ம் ஆன வெள்ளை சட்டை, காக்கி அரை டிராயருடுன்(அரைஜான் கயிறு பெல்டாகியிருந்தது). நிரைய கிழிந்திருந்தது. 4 பேர் ஐந்தாவது, ஒருவன் 6 வது.. ஒரே பள்ளி. யாரும் சாப்பிடவில்லை. பிஸ்கட் பாக்கட் வாங்கி எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே விசாரித்தேன். குடிகார, உடல்நிலை சரியில்லாத அப்பாக்களையும், சமூக விரோத சமூகத்தில் இருப்பதாலும் அவர்கள் யாசிப்பது எழுத நோட்டுகள் வாங்குவதற்கு. நோட்டுகள் வாங்க தங்களிடம் காசில்லை என்பதால் இவ்வாறு நண்பர்களாக வந்து பிச்சை எடுக்கின்றனர். அரசாங்கம் தான் தருதே என்றதற்கு, புத்தகம் தான் தராங்க என்றனர். சனி, ஞாயிறு இரண்டு நாள் பஸ் ஸ்டேண்டிலே தங்கி தேவையான நோட்டுகள் வாங்கி செல்கின்றனர். பிரீகேஜி படிக்கும் தன் மகனுக்கு 30,000.00 ரூபாய் பணம் கட்டும் என் சக ஊழியர் இருக்கும் சமூகத்தில் தான் 30 ரூபாய் வாங்க என் ஊர் சிறுவன் பிச்சை எடுக்கிறான்.

"பிச்சை புகினும் கற்கை நன்றே.." - நாம 'படிச்சது' தான். ஆனா இப்ப கேக்கவே அருவருப்பா இருக்கு.

வெக்கமா இருக்கு இல்ல..? வெக்கப்பட்டா மட்டும் போதுமா..???

2 comments:

Unknown said...

hai bharathi,

i really ashamed bze u really doing right job to show the fact and i future i try to follow your skills like " Routhiram Pazhagu" . Good job continue and my best wishes......


Thanks and Regards,
Harikrishnan.D

theerppavan said...

"இருளையும் வெளிச்சத்தையும் ஒரே நேரத்துல நம்மளால அனுபவிக்க முடியாது." - இது இயற்கை. ஆனா பாருங்க.... சமுதாயத்துல, ஒரே நேரத்துல ரெண்டையுமே பாக்கமுடியுது... ஒரு பக்கம், அளவுக்கு அதிகமா ஒருத்தன்ட்ட காசு இருக்கு... இன்னொரு பக்கம் அத்தியாவசியத்துக்குக் கூட ஒருத்தன்ட்ட காசு இல்ல.
"ஒங்களோட இந்த இடுகை ரொம்ப நல்லா இருக்குது பாரதி!" அப்படின்னு சொன்னா நம்மள மாதிரி ஒரு குரூர புத்தி மனுஷன் வேற யாரும் இருக்க முடியாது. ஏன்னா இது... ஆஹா ஓஹோன்னு ரொம்ப ரசிக்க வேண்டிய அனுபவம் இல்ல. இது நீங்க சந்திச்ச மோசமான அனுபவங்கள்ள ஒன்னு. இத இத மாதிரி நீங்க சந்திக்கும் போதெல்லாம் சமுதாயத்துக்கு சொல்லுங்க. ஏதாவது நடக்கும்.
ஏதாவது செய்யனும். பயமாவும் இருக்குது.