Tuesday, December 4, 2007

கற்பனை காலங்கள்...

"முருகா!" - பிடித்தபெண் அழைத்தபோதுதான் முதன்முறை என் பெயரை கவனித்தேன். ஒருமுறை நானே அழைத்துப் பார்த்துக்கொண்டேன்.

மழையில் சாய்ந்துபோகும் செடிகள் சூரியனை கண்டு சுதாரித்துக் கொள்வதைப் போல் அவளை காணும்போதெல்லாம் மனம் சுறுசுறுப்படையும். அன்பு பகிர்தளில் கரைந்துபோன கல்லூரி நாட்கள் முடிவுக்கு வந்தது. எல்லோரையும் போல் "ஆட்டோகிராப்"-காக டைரியை நீட்டினாள். புரட்டியவன் அதிர்ந்தேன். டைரியை "முருகன் துணை"யால் நிரப்பியிருந்தாள் என் யாழினி மேரி. என்றும் உணர்ந்திராத கிளர்ச்சியில் மிதந்தேன்.

நான் நானாக இல்லாத சமயம் என் கை தானாக எழுதியது ...

"என் யாழினி மேரி!
கிடக்கிறேன் உன்பால்
காதலில் ஊறி "

- தா. பாரதிராஜன்

3 comments:

Anonymous said...

Un Iyarpeyar Murugano? Naanaga Illamal Thaanaga Yezhudiyadhaal Kavithai Ullagil Vaanaga Uyarnthai.

Seethalai Sathanar said...

un paarvai kidaikkavillai endral poividuven naari

Seethalai Sathanar said...

Blogging is starting to become my favourite pass time......