Friday, June 6, 2008

நொந்த கதை

வெந்ததையும் வேகாததையும் தரும் இடத்தில் நேற்றிரவு நான் நொந்ததை என்னவென்று சொல்ல..?

நண்பரின் திருமணம் காண நேற்றிரவு தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் செல்ல, கூட்டம் நிரம்பி வழிந்த விழுப்புரம் பேருந்தில் 1 மணி நேரம் காத்திருந்த சலிப்பில் 11:30 மணிக்கு ஏறினேன்.

அது ஒரு விரைவுப் பேருந்து (இப்போதெல்லாம் வெறும் விரைவுப் பேருந்துகளை மட்டும் தான் பார்க்க முடிகிறது - Intellegent Theft என்பார்களே.. அது இதுதான்). நிற்க இடம் இல்லாததால் உட்கார்ந்து வந்தேன்... கீழே. அதுவும் அரைமணிநேர தேடலின் பின் தான். சிறிது நேரத்தில் வண்டி பெயர் பலகை இல்லாத ஒரு கொள்ளையகம் (அதான்.. Motel) முன் நின்றது.



புழுங்கித்தல்லும் வண்டிக்குள் இருப்பதா.. துற்நாற்றம் அடிக்கும் வெளியே இறங்குவதா என்ற மனச்சண்டையில் தாகம் வென்றது. முகுர்த்த நாள் என்பதால் காலி பாட்டில்களாலும், அலட்சிய ஆட்களாலும் நிரம்பி இருந்தது கடை. Motel க்கே உரிய "ஏலேலங்'கிலி'யே..." ரக பாடல்கள் வேறு காதை கிழித்தன. ஒரு 1லி தண்ணீர் பாட்டில் 18 ரூபாய் என்றதும் வெதும்பாத மனம், அதை ஒரு ரூபாய் சில்லரைக்காக நடத்துனரிடம் செங்கல்பட்டு வரை சண்டை போட்டவர் வாங்கி வாய் கொப்பலித்ததும் வலித்தது. இதுக்கு அவர் சண்டை போடலை. :-) 15 ரூபாயாக இருந்தாலும் கொள்கையை தளர்த்தி ஒரு 'Sprite' கேட்டேன்.. அலட்சய பதில் 'கோக்' மட்டுமே இருக்கு என்றது. 'கோக்'கிற்காக கொள்கையை தளர்த்த மனம் வராமல், இறைந்து கிடந்த plastic தேநீர் கோப்பைகளை மிதித்தவாரே மக்கள் ஊதித்தள்ளிக்கொண்டிருந்த புகைக்குள் புகுந்து புழுங்கும் பேருந்துள் புகுந்தேன்..

நான் உட்கார்ந்திருந்த இடத்திற்காக இரண்டு பேர் முட்டிக்கொண்டிருந்தனர்.

- தா.பாரதிராஜன்.

No comments: