ஒரு மழைநாள் மாலையில்
சாலையோரம் நடந்து கொண்டிருந்தேன்..
அப்போதுதான் துவங்கிய சிறுதூரல் எழுப்பியது
ஏதேதோ நினைவுகளை...
விரும்பி சேர்ந்த இசைக்கல்லூரியில்
எனக்கு மட்டுமே உரிய இசையாக நீ வருவாய்
என நினைத்திருக்காத சமயமது..
பெண்களுடனே பேசிப்பழகாத நான்,
உன்னை சுற்றி வந்த பலருக்கு
உன் ஊர் பேர் சொல்லிய நான்,
3 மாதங்களில் அவர்களுக்கெல்லாம்
எதிரியாவேன் என்று நானே நினைக்கவில்லை
நீதான் முதலில் பேசினாய் -
மெல்ல மெல்ல என் கூச்சம் பொசுங்கியது
கற்பனை கரங்களால்
யதார்த்த கதவுகள் மூடப்பட்ட சமயம் -
என் நினைவுகளில் நிரம்பிவழிய ஆரம்பித்தாய்
விடுமுறை நாட்களில்
உன் ஊர் பெயர் போட்ட பேருந்திலெல்லாம்
ஜன்னலோரம் உன்னை தேடித்தோற்பேன்
விடுமுறையை விரும்பாத
கல்லூரி மனம்
எனக்கும் இருந்தது
சாலையோரம் இருவரும் பேசியபடி செல்வோம் -
உலகமே மௌனமாகி
உன்குரல் மட்டுமே கேட்கும் -
அதுவரை நான் கற்ற இசை அங்கு தோற்கும்
ஓவ்வொரு வெள்ளியும்
எனக்கு மட்டுமே நீ இடும் திருநீரு,
கல்லூரியின் கர்வபார்வைக்கு
இட்ட திருஷ்டிபொட்டு எனக்கு
எது நம்மை சேர்த்தது என்று
இருவருமே பேசியது இல்லை
அன்று எதேச்சையாக உன்னிடம் சிக்கிய
'யாழினி - என் ஆழி நீ'' - என்ற
பஸ் டிக்கட் கவிதையை நீ ரசித்தது
எனக்குள் நம்பிக்கை தர
என் விருப்பம் சொல்ல காத்திருந்தேன்
காதல் வலியது!
பல கனம் -
வலி அது
கல்லூரி முடிந்த ஒரு மழை மாலை..
எனக்கும் சேர்த்து குடைபிடித்தபடி வந்தாய் -
மெல்ல மனம் திறந்தேன்...
மழையின் மீதான
காதலை கூட்டிய அந்த கனங்கள் -
நினைவில் மழையாய்...
நிஜமாய் அன்று இருவரும்
மழையை நனைத்தோம்!
- தா. பாரதிராஜன்
5 comments:
Kalakitta Nanba - I enjoyed reading this kavidhai. thiruneerai dhrishtipottaga paarkum idam arumai...
nee nanaintha mazhaikum...mazhaiyai nanaitha ungalukkum....nanrigal pala.thodaratum entha saral mazhai..
Bharthi Great da
Expecting lot more from you.
Sometimes it is happy to see our thoughts in lines. :-)
Really Superb!!!!
Thodaratum.....
மனங்களை ஈர்க்கும் இந்த முன்டாசு இல்லா பாரதிக்கு வாழ்த்துகுள்
Post a Comment