Friday, April 27, 2012

வேளச்சேரியில் சுகாதார அச்சுறுத்தல்

வேளச்சேரிக்கும் பெருங்குடிக்கும் இடையில் கொடுங்கையூர் போலவே ஒரு பெரிய பகுதியில் பல வருடங்களாக  குப்பை கொட்டி அதை தினமும் எரிக்கின்றனர். அதிலிருந்து வெளிப்படும் புகை வேளச்சேரியில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் டான்சி நகர், பேபி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், விஜய நகரம், தண்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை நிறைக்கின்றன. அந்த புகையால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற வெளிப்படையாக தெரியும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. பிப்ரவரி 2010 ல் குப்பைகளை எரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்தாக படித்துள்ளேன். வளர்ந்து வரும் புறநகரங்களில் இது போன்ற சுகாதார அச்சுறுத்தல் இருந்தால் எப்படி வாழ்வது?
 

No comments: